ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள மேட்டுவளவு என்ற பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைக் கடத்த முயன்றதாகக் கூறி மூதாட்டி ஒருவரைப் பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
தகவலறிந்து சென்ற போலீசார், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய மூதாட்டியை பொதுமக்களிடமிருந்து மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.