திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினர். இதில் கால்தவறி விழுந்த 2 பேர் காயம் அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் முதல் நாள் விழாவில் பூதகி வாகனத்தில் எழுந்தருளிய அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வான வேடிக்கையுடன் மங்கள வாத்தியங்களை இசைக்க கரகாட்டம் ஆட்டம் பாட்டத்துடன் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலமான திருவிக்ரசாமி கோவில் உற்சவத்தில் உலகளந்த பெருமாள் ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மாதர்கள் பங்கு பெற்று 1008 திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. ((உலகத்தில் அமைதி நிலவவும் குடும்பங்களில் சுபிட்சம் ஐஸ்வர்யம் பெருகவும் வேண்டிக் கொண்டனர்முன்னதாக தரையில் அமர்ந்து வாழை இலை விரித்து திருவிளக்கு ஏற்றி குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டது))
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்றது.