ஏப்ரல் 12, 2019க்கு பிந்தைய தேர்தல் பத்திர விவரங்களை கடந்த வாரம் தேர்தல் ஆணையம் வெளியிட்ட நிலையில், அதற்கு முந்தைய விவரங்கள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய விவரங்களின் அடிப்படையில், பாஜக 6986 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை பணமாக்கியிருக்கிறது. 1397 கோடி ரூபாயுடன் திரிணமூல் காங்கிரஸ், 1334 கோடி ரூபாயுடன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிகள் அதற்கு அடுத்த இரண்டு இடங்களில் உள்ளன.
திமுக 656 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்களாக பெற்று பணமாக்கியதில் 509 கோடி ரூபாய் சான்டியகோ மார்ட்டினின் ப்யூச்சர் கேமிங் நிறுவனம் வழங்கியிருப்பது தெரிய வந்துள்து. 6 கோடியே 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை அதிமுக பணமாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.