விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 2 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 272 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுவதாகவும், அதில் 22 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியலும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள ஆயிரத்து 698 வாக்குச்சாவடிகளில் 199 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை எனவும் கூறினார்.