இந்தியாவில் இருந்து சுமார் 2600 கிலோமீட்டர் தூரத்தில் சோமாலியாவின் கிழக்கு பகுதியில், வணிகக் கப்பல்களைக் கொள்ளையடிக்கப் பயன்படுத்தப்பட்ட கப்பலை இந்தியக் கடல்படை தாக்கியது .
இந்தியக் கடற்படையின் கொல்கத்தா கப்பலுடன் சுபத்ரா என்ற மற்றொரு கப்பலும் பாதுகாப்பு அளித்து நின்றது. மேலும் P81 என்ற கடலோர பாதுகாப்பு படையின் ஹெலிகாப்டர்களும் களமிறங்கின.
துப்பாக்கிச் சண்டையுடன் கூடிய சுமார் 40 நேர முற்றுகைக்குப் பிறகு கப்பலில் இருந்த 35 கொள்ளையர்கள் சரணடைந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் கடத்தப்பட்ட RUEN என்ற வணிகக் கப்பலை சோமாலியாவில் கொள்ளையர்கள் தாக்குதலுக்குப் பயன்படுத்தி வந்தனர்.
அந்தக் கப்பலை இந்தியக் கடல்படை மீட்டது. அதில் இருந்த 17 கப்பல் ஊழியர்களும் காயமின்றி மீட்கப்பட்டனர்