​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணன் தான் வேட்பாளர்... ஆளுக்கொரு சேலை வாங்கிக்கங்க.. அள்ளிக்கொடுத்த அதிமுகவினர்..!

Published : Mar 16, 2024 9:56 PM



அண்ணன் தான் வேட்பாளர்... ஆளுக்கொரு சேலை வாங்கிக்கங்க.. அள்ளிக்கொடுத்த அதிமுகவினர்..!

Mar 16, 2024 9:56 PM

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தால் பரிசு பொருள் கொடுக்க முடியாது என்பதால்,  இன்னும் அதிகாரபூர்வமாக கட்சியினரால் அறிவிக்கப்படாத வட சென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோகர் சார்பாக பெண்களுக்கு இரவோடு இரவாக இலவச சேலை வழங்கப்பட்டது

வடசென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூரில் பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்குவதற்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் , தேர்தல் தேதி அறிவிப்பு வர இருப்பதை அறிந்து வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக முன்னாள் எம்.எல்.ஏ குப்பன், மகளிருக்கு ஆளுக்கு ஒரு சேலையை வழங்கினார்

இன்னும் அதிமுகவில் எந்த தொகுதிக்கும் வேட்பாளர் அறிவிக்காத நிலையில் வட சென்னை தொகுதிக்கு இராயபுரம் மனோகர் தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறிய முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி இரட்டை இலைக்கு வாக்கு கேட்டார்

முன்னதாக பேசிக்கொண்டிருக்கும்போது வானில் வெடித்து சிதறும் 100 ஷாட்ஸ் பட்டாசை பற்ற வைத்த தொண்டரை நோக்கி ஆவேசமான முன்னாள் எம்.எல்.ஏ குப்பன், அதனை அனைத்து தள்ளிவிடும் படி கடிந்து கொள்ள அருகில் நின்றவர் இடையில் அதை நிறுத்த முடியாதுண்ணே என்று அமைதிப்படுத்தினார்