லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்தில் நடிக்க நடிகர் - நடிகை தேவை என போலி விளம்பரம் செய்து பெங்களூர் இளம் பெண்ணிடம் முக்கிய கதாபாத்திரம் தருவதாகவும், ரஜினிகாந்துடன் நேரடியாக இணைந்து நடிக்கும் கதாபாத்திரங்கள் இருப்பதாகவும் கூறி சமூக வலைதளங்களில் படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு மோசடி செய்துள்ளனர்.
சுரேஷ் என்ற நபர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.விசாரணையில் இது போலியான அறிவிப்பு என்றும், இதை வைத்து பலரிடமும் அந்த நபர் பணம் பறித்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.