அம்பாசமுத்திரத்தில் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையின்போது, ஒரு காரில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள துப்பாக்கியும் ஆறு தோட்டாக்களும் இருந்தன.
காரில் வந்த மாயகிருஷ்ணன், பழனிராஜ் இருவரிடம் விசாரித்தபோது, பீரான் மற்றும் சிவலிங்கம் ஆகியோர் மூலம் கேரளாவில் வாங்கி தமிழகத்துக்கு விற்பனைக்கு கொண்டுவந்தது தெரிந்தது.
இதையடுத்து நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.