ஸ்பீக்கரில் திமுக பாட்டு.. சாலை மத்தியில் படுக்கை...அட்ராசிட்டி செய்த குடிமகன்..! பக்கத்து ஊர் பரமக்குடியா.. பாத்துகுடிய்யா..!
Published : Mar 16, 2024 6:45 AM
ஸ்பீக்கரில் திமுக பாட்டு.. சாலை மத்தியில் படுக்கை...அட்ராசிட்டி செய்த குடிமகன்..! பக்கத்து ஊர் பரமக்குடியா.. பாத்துகுடிய்யா..!
Mar 16, 2024 6:45 AM
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த பிடாரிச்சேரியில் ரேசன் கடை திறப்பு விழாவுக்கு வந்த எம்.எல்.ஏவை வரவேற்க திமுக கொடிகட்டி ஸ்பீக்கர் வைத்த நிலையில் , இளம் போதை ஆசாமி ஒருவர் சாலை நடுவில் படுத்துக் கொண்டு அட்ராசிட்டி செய்த சம்பவத்தால் போலீசார் நொந்து போயினர்.
நெடுஞ்சாலை எங்களுக்கு பஞ்சு மெத்தை...! ஸ்பீக்கர் பாட்டு எங்களுக்கு பூஸ்ட்டு..! என்று மொட்டை வெயிலில் கால் மேல் கால் போட்டு இளம் குடிகாரர் அட்ராசிட்டி செய்த சம்பவம் அரங்கேறிய இடம் பரமகுடி அடுத்த பிடாரிச்சேரி
பிடாரிச்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய்விலை கடையை திறந்து வைக்க வந்த பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசனை வரவேற்க திமுக கொடிகட்டி ஸ்பிக்கரில் கொள்கை விளக்க பாடல்களை ஒலிக்கவிட்டனர். பாட்டை கேட்டு பூஸ்ட்டான இளம் குடிகாரர் ஒருவர் சாலையில் படுத்து அட்ராசிட்டி செய்ய தொடங்கினார்
அவரை சாலையில் இருந்து ஒரு முதியவர் வலுக்காட்டாயமாக அப்புறப்படுத்த , அடங்க மறுத்த அந்த இளம் சிறுத்தை மீண்டும் சாலையில் மல்லாக்க படுத்துக் கொண்டு அடாவடி செய்தது
பேருந்து ஓட்டுனர்கள் எல்லாம் சத்தம் போட்டப்படி சென்றதால் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் அந்த குடிமகனை சாலையில் இருந்து தூக்கினர். அவர்களிடம் தான் எந்த கட்சியும் சாராதவன் என்று லந்தாக பேசிய இளைஞர், உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா சொல்லுங்க வெளுத்து விட்டுருவோம் என்று அலப்பறையை கிளப்பினார்
அவரை அங்கிருந்து போக சொன்ன நிலையில் , தான் திமுக நகர செயலாளரிடம் ஓட்டுனராக வேலை பார்த்ததாகவும் தனக்கு எல்லா விசயமும் தெரியும் என்றும் அங்கிருந்து செல்லமறுத்து போலீசாரிடம் தம்கட்டினார்
டாஸ்மாக் சரக்கு உபயத்தால் ஊருக்கு ரெண்டு குடிகாரர்கள் சாலையில் படுத்து அலம்பல் செய்வது தொடர்கதையாகி வருகின்றது.