தஞ்சாவூர் அடுத்த துலுக்கம்பட்டி கிராமத்தில் வளரும் பனை மரங்களில் கட்டப்பட்டிருந்த கள் கலயங்களை மது விலக்கு போலீசார் உடைத்து விட்டு சென்றதாக அங்கு வசித்துவரும் பனையேறிகள் தெரிவித்தனர்.
பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய 3 மாதங்களில், பதநீர் மற்றும் கள் இறக்குவதை 10 தலைமுறைகளாக செய்துவருவதாகவும், அதனை நம்பி அந்த கிராமத்தில் 200 குடும்பங்கள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், கள் இறக்கி விற்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யுமாறு பனையேறியும், வழக்கறிஞருமான குணசேகரன் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.