​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியல்

Published : Mar 15, 2024 7:16 PM

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியல்

Mar 15, 2024 7:16 PM

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியல் கசிந்துள்ளது.

அதில், கன்னியாகுமரியில் விஜய் வசந்த்திற்கும், விருதுநகரில் மாணிக்கம் தாகூருக்கும், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்திற்கும் மீண்டும் வாய்ப்பளிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆரணி தொகுதி வேட்பாளருக்கான ரேஸில் விஷ்ணுபிரசாத்தின் பெயர் அடிபடுகிறது. கிருஷ்ணகிரியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கட்சித் தலைமையிடம் செல்லக்குமார் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,  திருவள்ளூரில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை களமிறக்கவும் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

கடந்த முறை திருச்சியில் போட்டியிட்டு வென்ற திருநாவுக்கரசுவை இம்முறை தேனி அல்லது மயிலாடுதுறையில் களமிறக்கலாம் எனவும், கரூரில் ஜோதிமணியே போட்டியிடலாம் என தெரிகிறது.