அண்டார்டிகா பனிப் பிரதேசத்தில் காணப்படும் நீர்க் காக்கைகள் மற்றும் பென்குயின்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
தெற்கு ஜார்ஜியா தீவில் இறந்து கிடந்த பழுப்பு நிற ஸ்குவாக்களை பரிசோதனை செய்ததில் பறவை காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததை சிலி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து, நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அண்டாட்டிக் பனிப் பிரதேசத்திலும் பறவைக் காய்ச்சல் பரவி வருவதை அவர்கள் கண்டுபிடித்தனர். தென் அமெரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்த பறவைகளால்தான் பென்குயின்களுக்கு H5N1 வைரஸ் பரவி இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.