ஆஸ்திரேலியாவில் காலநிலை மாற்றத்தால் பவளப்பாறைகள் அழியக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை
Published : Mar 15, 2024 3:39 PM
ஆஸ்திரேலியாவில் காலநிலை மாற்றத்தால் பவளப்பாறைகள் அழியக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை
Mar 15, 2024 3:39 PM
ஆஸ்திரேலியாவில், கிரேட் பேரியர் ரீப் வடக்குப் பகுதியில் உள்ள தேசிய பூங்காவை சுற்றியுள்ள 6 தீவுகளில் பவளப்பாறைகள் வெளிர் நிறத்தில் மாறி வருவதாக ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடலின் வெப்பநிலை அதிகரித்து வருவதால், பவளப்பாறைகளின் திசுக்களுக்கு நிறத்தை வழங்கும் ஆல்கா உயிரினங்கள் குறைந்து பவளப்பாறை நிறம் வெளிறி வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தால் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தால் பவளப்பாறைகள் அழியும் சூழல் ஏற்படும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.