சென்னை வால்டாக்ஸ் சாலை மற்றும் எழும்பூர் பகுதியை இணைக்கும் யானைக்கவுனி மேம்பாலத்தின் ஒரு பகுதி பணிகள் நிறைவுபெற்றதையடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
மாநகராட்சியின் 30 கோடி நிதி மற்றும் ரயில்வே நிர்வாகத்தின் 49கோடி நிதி என மொத்தம் 79 கோடி செலவில் 520 மீட்டர் நீளம் , 20 மீட்டர் அகலத்தில் இப் பாலம் கட்டப்பட்டுள்ளது.