சேலம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் மண் கரை மீது மல்ஷிங் ஷீட் போர்த்தப்பட்டு நுண்ணீர் பாசனத்தில் சாகுபடி செய்யப்படும் ஐஸ் பாக்ஸ் தர்பூசணி இந்தாண்டு அதிக விளைச்சல் கண்டு விலையும் அதிகமாக கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மண் கரை மீது நிலப்போர்வை எனும் மல்ஷிங் ஷீட் போர்த்தப்பட்டு, நுண்ணீர் பாசனம் மேற்கொள்ளும் போது தண்ணீர் தேவை குறைவதாக கூறியுள்ள விவசாயிகள், இம்முறையில் வெயில் காலத்தில் நீர் ஆவியாகாமல், செடிகளுக்கு போதுமான அளவு கிடைப்பதுடன், களையையும் எளிதாக அகற்ற முடிவதாக குறிப்பிட்டுள்ளனர்.
வழக்கமான தர்பூசணி பழங்களை அறுவடை செய்ய 90 நாட்கள் ஆகும் நிலையில், ஐஸ் பாக்ஸ் தர்பூசணி 60 நாட்களில் அறுவடையாவதால் செலவும் குறைவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
நீர்வழி உரங்கள் பயன்படுத்துவதால் பெரிய அளவில் விளையும் இந்த தர்பூசணி காய்கள் ஏக்கருக்கு அதிகபட்சமாக, 20 டன் வரை விளைச்சல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.