​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அடேய்.. உங்களுக்கே நியாயமா.. விவசாயி சின்னம் வேணுமுன்னா எங்க கூட கூட்டணிக்கு வாப்பா..! சீமானுக்கு அழைப்பு விடுத்த பா.ம.ஐ கட்சி

Published : Mar 15, 2024 6:30 AM



அடேய்.. உங்களுக்கே நியாயமா.. விவசாயி சின்னம் வேணுமுன்னா எங்க கூட கூட்டணிக்கு வாப்பா..! சீமானுக்கு அழைப்பு விடுத்த பா.ம.ஐ கட்சி

Mar 15, 2024 6:30 AM

 கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சியிடம் இருந்த விவசாயி சின்னத்தை தன் வசம் வைத்துள்ள பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக அறிவித்துள்ள நிலையில், சீமான் விரும்பினால் தங்களுடன் கூட்டணி வைத்து விவசாயி சின்னத்தில் போட்டியிடலாம் என்று கூறி உள்ளது.

ஒரு காலத்தில் சீமான் தம்பிகளால் வெல்லபோறான் விவசாயி என்று மூலைமுடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்ட விவசாயி சின்னம்... தற்போது கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்ட பாரதீய பிரஜா ஐக்கிய பார்ட்டி கையில் உள்ளது.

தமிழகத்தில் விவசாயி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று சீமான் நீதி கேட்டு உச்ச நீதிம்ன்றத்தை நாடியுள்ளார். இந்த நிலையில் பாரதீய பிரஜா ஐக்கிய பார்ட்டி தமிழகத்தில் பாரதீய மக்கள் ஐக்கிய கட்சி என்ற பெயரை மாற்றி வைத்துக் கொண்டு பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதன் தமிழக தலைவர் டாக்டர் யோகி ஜெயக்குமார், தமிழகம் ,புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தாங்கள் விவசாயி சின்னத்தில் போட்டியிட உள்ளதாகதெரிவித்தார்

விவசாயி சின்னத்தில் போட்டியிட சீமான் விரும்பினால் தங்களுடன் கூட்டணி வைத்து, தங்கள் சின்னத்தில் போட்டியிடலாம் என்று குறும்பாக கூறி நகைப்பை ஏற்படுத்தினார்

செய்தியாளர் சந்திப்புக்கு வந்த அவரது வாகனத்தின் பேனட்டில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரில் திராவிட தெலுங்கு தேசம் கட்சி என்றும் முன்பக்க கண்ணாடியில் கலைஞர் அறிவகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது

தங்களுக்கு விவசாயி சின்னம் கிடைக்காமல் போனதுக்கு காரணம் பா.ஜ.க தான் என்று நம்பி வந்த நிலையில், வேறு ஒரு முகாமில் இருந்து விவசாயி சின்னத்தை பறிக்க வேலை நடந்திருப்பதாக தம்பிகள் தற்போது ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.