​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எங்க போனாலும் லஞ்சம் கேட்குறாங்கப்பா.. திமுக கூட்டத்தில் பாட்டி உரிமைக்குரல்.. செருப்பால் அடிக்க சொன்ன பேச்சாளர்..!

Published : Mar 15, 2024 6:25 AM



எங்க போனாலும் லஞ்சம் கேட்குறாங்கப்பா.. திமுக கூட்டத்தில் பாட்டி உரிமைக்குரல்.. செருப்பால் அடிக்க சொன்ன பேச்சாளர்..!

Mar 15, 2024 6:25 AM

திருவண்ணாமலை அருகே நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் விதவை உதவித்தொகை கேட்டு எங்க போனாலும் லஞ்சம் கேட்குறாங்கப்பா என்று புகார் தெரிவித்த மூதாட்டியிடம், லஞ்சப்பணம் கேட்பவனை செருப்பால் அடி என்று திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நடந்த பட்ஜெட்விளக்கப் பொதுக்கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகளை விளக்கி திமுகவின் தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார், பெண்களுக்கு பேருந்தில் உரிமை பயணம், உரிமைத்தொகை என்று அவர் பேசிக் கொண்டிருக்க, கூட்டத்தில் சில பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததால் டென்சனார்

மீண்டும் அவர் பேச தொடங்கியதும் மூதாட்டி ஒருவர் சாமி, என் மகன் 5 வருஷத்துக்கு முன்பு இறந்துட்டான் ... மருமகளுக்கு ஒரு வேலையோ, விதவை உதவி தொகையோ ஏற்பாடு செய்து கொடுங்க என்று கோரிக்கை விடுத்தார், அவரிடம் விசிட்டிங் கார்டு தர்ரேன் கோட்டைக்கு வந்துரு... யாரையும் பார்க்காத.. என்று சமாளித்த சிவாஜி கிருஷ்ண மூர்த்தி, நேரா நெட் செண்டருக்கு போய் முதல்வருக்கு மனு அனுப்பு என்று யூ டர்ன் அடித்தார்

5 வருஷமாக .. எல்லாருக்கும் மனு கொடுத்தாச்சு லஞ்சம் கேட்குறாங்க சாமின்னு...என்று அந்த மூதாட்டி தெரிவித்ததால்.. லஞ்சம் கேட்குறவன செருப்பால அடி.. இது தளபதி ஆட்சி எப்படி லஞ்சம் கேட்கலாம் ?என்று ஆவேசமான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி , இந்த மாதம் உதவி தொகையை தான் தருவதாக தெரிவித்தார்