நடப்பாண்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொப்பரை தேங்காய், பச்சைப் பயிறு மற்றும் உளுந்து கொள்முதல் செய்யப்பட உள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
பந்து கொப்பரை தேங்காய் கிலோ 120 ரூபாய்க்கும், அரவை கொப்பரை கிலோ 111 ரூபாய் 60 காசு என்ற வீதத்தில் 90 ஆயிரத்து 300 மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.