மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சேலம் மாவட்டம் கந்தம்பிச்சனூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்யக் கோரி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து போக்சோ வழக்கில் தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.