நீலாங்கரை கடற்கரையில் மஞ்சப் பை ஏ.டி.எம். நிறுவப்பட்டுள்ளது
Published : Mar 14, 2024 7:51 AM
சென்னை மாநகராட்சியில் தினந்தோறும் சேகரமாகும் 6,073 மெட்ரிக் டன் குப்பையிலிருந்து 5 சதவீதம் பிளாஸ்டிக் பிரித்தெடுக்கப்பட்டு, பயோ பியூயல் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கிழக்கு கடற்கரை சாலையான நீலாங்கரையில், பணம் செலுத்தினால் மஞ்சப்பை வரும் தானியங்கி இயந்திரத்தை அமைச்சர் மெய்யநாதனுடன் சேர்ந்து துவக்கி வைத்த மா.சுப்பிரமணியன் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு வாகன பிரசாரத்தையும் துவக்கி வைத்தார்.