ராட்வெய்லர், பிட்புல், புல்டாக் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாய் இனங்களை விற்பனை செய்ய தடை விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வகை நாய்கள் கடித்து அவ்வப்போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக அவற்றை இறக்குமதி செய்யவும், இனப்பெருக்கம் செய்ய வைக்கவும், அவற்றின் மூலம் கலப்பின நாய்களை உருவாக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் ஏற்கனவே வளர்க்கப்பட்டுவரும் அந்த இன நாய்களுக்கு கருத்தடை செய்யுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்டு, கிரேட் டேன் போன்ற நாய் இனங்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.