பொள்ளாச்சியில் தென்னை வேர்வாடல் நோயால் பாதிப்புக்குள்ளான மரங்களை வெட்டி அகற்றுவதற்காக 14 கோடியே 4 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் எனவும், விவசாயிகளுக்கு 3 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 560 கோடி ரூபாய் மதிப்பிலான 273 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 489 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பேசிய அவர், தமிழகத்திற்கு மத்திய அரசு நிறைவேற்றிய திட்டங்களின் பட்டியலை பிரதமர் வெளியிடுவாரா என கேள்வி எழுப்பினார்.