தேனி, சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகளை பெறுவதில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் தரப்புக்கு இடையே போட்டி நிலவுவதால் இரு தரப்பையும் அழைத்து விடிய விடிய பேசியும் பா.ஜ.க.வால் தொகுதிகளை இறுதி செய்ய முடியவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
தேனி தொகுதியை அ.ம.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்ற உடன்பாட்டிற்கே பிறகே பா.ஜ.க.வுடனான கூட்டணியை தினகரன் அறிவித்ததாக கூறப்படுகிறது.
டி.டி.வி. தினகரன் தரப்புக்கு தேனி ஒதுக்கப்பட்டால், தமது மகனுக்கு ராமநாதபுரம் தொகுதி பெறலாம் என ஓ.பி.எஸ். திட்டமிட்டிருந்த நிலையில், அத்தொகுதியை கூட்டணிக்கு விட்டுத்தர முடியாது என பா.ஜ.க. உறுதிபட கூறியதாக சொல்லப்படுகிறது.