ரூ.1.25 லட்சம் கோடி முதலீட்டில் 3 செமிகண்டக்டர் ஆலைகள் அமைப்பதற்கு காணொளி மூலம் பிரதமர் மோடி அடிக்கல்
Published : Mar 13, 2024 3:15 PM
ரூ.1.25 லட்சம் கோடி முதலீட்டில் 3 செமிகண்டக்டர் ஆலைகள் அமைப்பதற்கு காணொளி மூலம் பிரதமர் மோடி அடிக்கல்
Mar 13, 2024 3:15 PM
ஒன்றேகால் லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 3 செமிகண்டக்டர் ஆலைகளை அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் குஜராத்தில் 2 ஆலைகளும், அசாமில் ஒரு ஆலையும் அமைக்கப்படுவதால் உலகின் செமிகண்டக்டர் மையமாக இந்தியா உருவெடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க நாள் இது என்று பெருமிதம் தெரிவித்தார்.
தொழிற்புரட்சி 4.O மூலம் உலகின் CHIP தேவையை நிறைவு செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த ஆலைகளால் 20 ஆயிரம் பேர் நேரடியாகவும், 60 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.