​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பைக் வீலிங் செய்தபோது இருசக்கர வாகனத்தின் மீது மோதிய இளைஞர் கைது... கல்லூரி மாணவிகள் 2பேர் காயம்

Published : Mar 13, 2024 2:36 PM

பைக் வீலிங் செய்தபோது இருசக்கர வாகனத்தின் மீது மோதிய இளைஞர் கைது... கல்லூரி மாணவிகள் 2பேர் காயம்

Mar 13, 2024 2:36 PM

திருவாரூர் மாவட்டம், புலிவலம் அருகே விலை உயர்ந்த கேடிஎம் பைக்கில் வீலிங் செய்தபோது, இருசக்கர வாகனம் மீது மோதியதில் 2 கல்லூரி மாணவிகள் காயமடைந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய கோதர் மைதீன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

வீலிங் செய்து வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் ரீல்சாக பதிவிடுவதையே வழக்கமாக வைத்திருந்த கோதர் மைதீன் மீது கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.