அதிவேகம் மற்றும் கவனக்குறைவாக வந்ததால் நேருக்கு நேர் மோதிய டூவீலர்கள் - ஒருவர் பலி ; 5 பேர் காயம்
Published : Mar 13, 2024 1:34 PM
அதிவேகம் மற்றும் கவனக்குறைவாக வந்ததால் நேருக்கு நேர் மோதிய டூவீலர்கள் - ஒருவர் பலி ; 5 பேர் காயம்
Mar 13, 2024 1:34 PM
கன்னியாகுமரி மாவட்டம், கல்லுக்கூட்டம் பகுதியில் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வந்ததால் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி தூக்கி வீசப்பட்ட விபத்தில் மதன்லால் என்பவர் உயிரிழந்தார்.
இரண்டு வாகனங்களிலும் தலா மூன்று பேர் பயணம் செய்த நிலையில், இருதரப்பிலும் தலைக்கவசம் அணியாமல் இருந்துள்ளனர்.
வழக்கறிஞரான மதன்லால் ஓட்டி வந்த டூவீலர் சாலையோரம் இருந்த சிறிய தண்ணீர் தொட்டியில் தூக்கி வீசப்பட்டு தலைகீழாக தொங்கியது. காயமடைந்த மற்ற ஐந்து பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.