தாய்லாந்தில் தேசிய யானைகள் தினம் கொண்டாட்டம்.. காப்பகங்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு தடபுடால் விருந்து..!!
Published : Mar 13, 2024 1:30 PM
தாய்லாந்தில் தேசிய யானைகள் தினம் கொண்டாட்டம்.. காப்பகங்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு தடபுடால் விருந்து..!!
Mar 13, 2024 1:30 PM
தாய்லாந்தில், தேசிய யானைகள் தினத்தை முன்னிட்டு காப்பகங்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு டன் கணக்கில் பழங்களும், காய்கறிகளும் விருந்தாக அளிக்கப்பட்டன.
தந்தத்துக்காக யானைகள் வேட்டையாடப்படுவதிலிருந்து அவற்றை பாதுகாத்து, சுற்றுச்சூழல் பன்முகத்தன்மையை பாதுகாப்பதில் யானைகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக, 25 ஆண்டுகளாக யானைகள் தினம் அங்கு கொண்டாடப்பட்டுவருகிறது.
அங்குள்ள வனவிலங்கு சரணாலயங்களில் மூன்றாயிரத்து 800 யானைகள் உள்ளதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.