அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு 6 மாத கெடு விதிக்கும் மசோதா மீது இன்று வாக்கெடுப்பு
Published : Mar 13, 2024 12:03 PM
அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு 6 மாத கெடு விதிக்கும் மசோதா மீது இன்று வாக்கெடுப்பு
Mar 13, 2024 12:03 PM
அமெரிக்காவில் டிக்டாக் செயலி நிறுவன பங்குகளை விற்று விட்டு சீன நிறுவனமான ByteDance 6 மாதங்களில் வெளியேறவும் தவறினால் டிக்டாக்கிற்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதா மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
சீன நிறுவனத்தின் டிக்டாக்கை அமெரிக்காவில் சுமார் 17 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். சீனா வசமுள்ள டிக்டாக்கால் அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறி, அமெரிக்க முதலீட்டாளர்கள் உரிமை பெறும் வகையில் பங்குகளை விற்க மசோதா வலியுறுத்துகிறது.
இந்த மசோதாவில் கையெழுத்திட உள்ளதாக அதிபர் ஜோ பைடன் கூறியுள்ள நிலையில், இதுகுறித்து சீனா என்ன முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.