​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அ.தி.மு.கவை வீழ்த்த பா.ம.க அஸ்திரமாக திகழுமென பா.ஜ.க கணிப்பு

Published : Mar 13, 2024 8:32 AM

அ.தி.மு.கவை வீழ்த்த பா.ம.க அஸ்திரமாக திகழுமென பா.ஜ.க கணிப்பு

Mar 13, 2024 8:32 AM

அ.தி.மு.கவை வீழ்த்துவதற்கான 'அஸ்திரம்' பா.ம.க மட்டும் தான் என்பதால் அவர்களுடனான கூட்டணியை முடித்துக் கொடுங்கள் என அழுத்தம் கொடுக்கப்பட்டதால் இன்று அதிகாலையில் டெல்லிக்குச் சென்ற சில மணி நேரத்திலேயே மீண்டும் பாஜக தேர்தல் குழு சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அ.ம.மு.க மற்றும் ஓ.பி.எஸ் உடனான பேச்சுவார்த்தை நள்ளிரவை தாண்டிய நிலையில் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே. சிங் ஆகியோரை கொண்ட பா.ஜ.க குழு டெல்லி புறப்பட்டு சென்றது.

பா.ம.க வந்தால் கூட்டணியின் வாக்கு வாங்கி 18 முதல் 20 சதவீதம் உயரும் என கணிக்கப்படுவதால் இன்று இரவு பா.ம.கவுடன் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.