கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா 10-வது நாளான நேற்று நள்ளிரவு அம்மனுக்கு 11-வகை உணவு பதார்த்தங்கள் மண் பானைகளில் துணிகளால் மறைத்து எடுத்து வரப்பட்டு படையலிடும் ஒடுக்கு பூஜை சிகர நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
அதிகாலை வரை நடைபெற்ற ஒடுக்கு பூஜையில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்