​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சி.ஏ.ஏ. சட்டத்தால் எந்தவொரு இந்தியரும் குடியுரிமையை இழக்க மாட்டார்- மத்திய அமைச்சர் அமித் ஷா

Published : Mar 13, 2024 6:53 AM

சி.ஏ.ஏ. சட்டத்தால் எந்தவொரு இந்தியரும் குடியுரிமையை இழக்க மாட்டார்- மத்திய அமைச்சர் அமித் ஷா

Mar 13, 2024 6:53 AM

குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் எந்த இந்தியரும் குடியுரிமையை இழக்கப் போவதில்லை என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெளிவுபடுத்தியுள்ளார்.

இச்சட்டத்தால் சிறுபான்மையினர் தங்கள் குடியுரிமையை இழந்து விடுவார்கள் என்று பிரச்சாரம் செய்து உண்மைகளைத் திரித்துக் கூறுவதாக ராகுல், கார்கே, ஓவைசி உள்ளிட்டோரை அவர் சாடினார்.

அண்டைநாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த இந்துக்கள், பௌத்தர்கள்.

சீக்கியர்கள் மற்றும் ஜெயின் இனத்தவருக்கு குடியுரிமை அளித்து பிரதமர் மோடி கௌரவப்படுத்தி இருப்பதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

சிறுபான்மையினரின் ஓட்டுகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இச்சட்டத்தை எதிர்ப்பதாகவும் அமித் ஷா தெரிவித்தார்