​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரேஸிலில் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென கீழே 'சரிந்ததில்' 50 பயணிகள் காயம்

Published : Mar 12, 2024 2:51 PM

பிரேஸிலில் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென கீழே 'சரிந்ததில்' 50 பயணிகள் காயம்

Mar 12, 2024 2:51 PM

பிரேஸில் நாட்டின் லாத்தம் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான போயிங் 787 விமானம் 263 பயணிகளுடன் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென்று குலுங்கி சில விநாடிகளுக்கு முன்னும் பின்னும் ஆடியபடி சடாரென கீழே செங்குத்தாக சரிந்ததில், அதில் பயணம் செய்த 50 பேர் காயமடைந்தனர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கு விமானம் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. 

காயமடைந்தவர்களுக்கு விமான நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயமடைந்த ஒருவர் மற்றும் மூன்று விமானப் பணியாளர்கள் உள்பட 10 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.