​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேற்கு வங்கம்: 42 தொகுதிகளுக்கும் திரிணாமுல் காங். வேட்பாளர்கள் அறிவிப்பு

Published : Mar 10, 2024 6:03 PM

மேற்கு வங்கம்: 42 தொகுதிகளுக்கும் திரிணாமுல் காங். வேட்பாளர்கள் அறிவிப்பு

Mar 10, 2024 6:03 PM

இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்  42 வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

இந்த பட்டியலில் தற்போதைய எம்.பி.க்கள் 16 பேர் உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யூசுப் பதான், கீர்த்தி ஆசாத் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் பஹராம்பூர் தொகுதியில் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் களமிறக்கப்பட்டுள்ளார்.

மம்தா பானர்ஜியின் தன்னிச்சையான அறிவிப்பு,  காங்கிரஸ் உட்பட இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.