​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் புஷ்ப கமல் தஹால் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டது நேபாள காங்கிரஸ்

Published : Mar 10, 2024 6:48 AM

பிரதமர் புஷ்ப கமல் தஹால் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டது நேபாள காங்கிரஸ்

Mar 10, 2024 6:48 AM

நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தஹால் தலைமையிலான அரசுக்கு அளித்த வந்த ஆதரவை நேபாள காங்கிரஸ் விலக்கிக்கொண்டது.

இதையடுத்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ள பிரதமர், மார்ச் 13-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோர உள்ளார். பிரதமராக புஷ்ப கமல் தஹால் பதவியேற்ற கடந்த 15 மாதங்களில் மூன்றாவது முறையாக அவர் நம்பிக்கை வாக்கு கோர உள்ளார்.

புஷ்ப கமால் தஹாலின் சிபிஎன்-மாவோயிஸ்ட் கட்சியுடன், சிபிஎன்-யுஎம்எல், ராஷ்ட்ரீய சுதந்திரா கட்சி, ஜனதா சமாஜ்வாதி கட்சி ஆகியவை சேர்ந்து புதிய கூட்டணி உருவாகியுள்ளது.

அறுதிப்பெரும்பான்மைக்கு 138 இடங்கள் தேவை என்ற நிலையில், புதிய கூட்டணிக்கு 142 இடங்கள் உள்ளன.