​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நாளை நடைபெறவுள்ள நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விழா ஏற்பாடுகள்...

Published : Mar 09, 2024 6:19 PM

96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நாளை நடைபெறவுள்ள நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விழா ஏற்பாடுகள்...

Mar 09, 2024 6:19 PM

சர்வதேச சினிமா விருதுகளில் மிகவும் உயரியதாக கருதப்படும் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நாளை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.

கோல்டன் குளோப் விருதுகளில் அதிக விருதுகளை பெற்ற ஓபன்ஹெய்மர் உள்ளிட்ட திரைப்படங்களே இந்த ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலிலும் அதிகமான இடங்களை பிடித்துள்ளன. 

சிறந்த திரைப்படம், சிறந்த நாயகன், சிறந்த நடிகை உள்ளிட்ட 13 பிரிவுகளில் 'ஓபன்ஹெய்மர்' ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பூவர் திங்ஸ் திரைப்படம் 11 பிரிவுகளிலும், கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன் 10 பிரிவுகளிலும், பார்பி திரைப்படம் 8 பிரிவிகளிலும் தேர்வாகியுள்ளது.

சிறந்த ஆவணப்படப் பிரிவுக்கான போட்டியில் இந்திய கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மகளுக்காக தந்தையின் நீதிப் போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட டூ கில் எ டைகர் இடம்பெற்றுள்ளது