சிறுமி கடத்தி கொடூர கொலை முழு அடைப்பு போராட்டத்துக்கு சுனாமியாய் திரளும் மக்கள்..! பிரபலங்கள் ஆதரவுக்குரல்
Published : Mar 07, 2024 7:47 PM
சிறுமி கடத்தி கொடூர கொலை முழு அடைப்பு போராட்டத்துக்கு சுனாமியாய் திரளும் மக்கள்..! பிரபலங்கள் ஆதரவுக்குரல்
Mar 07, 2024 7:47 PM
9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு நீதி கேட்டு நாளை புதுச்சேரியில் முழு அடைப்புக்கு அதிமுக மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்த நிலையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்
சின்னஞ்சிறு பிள்ளை என்றும் பாராமல் கஞ்சா போதையால் 9 வயது சிறுமியை கடத்தி பலாத்கார முயற்சியில் கொலை செய்து, சடலத்தை சாக்கடை கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இந்த சம்பவம் தொடர்பாக 57 வயது பாலியல் அரக்கன் விவேகானந்தன், 19 வயது கஞ்சாகுடிக்கியான காக்கா என்கிற கருணாஸ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கொலை, போக்சோ, மற்றும் எஸ்.சி.எஸ்.டி வன் கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிடவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் புதுச்சேரி மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
காவலர்கள் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையில் முனைப்பு காட்டாததால் தான் சிறுமி கொலைக்கு காரணமானதாக கூறி மக்கள் வீதியில் இறங்கி போராடினர்
முதற்கட்டமாக முத்தியால் பேட்டை காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மேலும் சில போலீசார் உடனடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
இந்த குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட இருவர் சார்பாக எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராக போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்த புதுச்சேரி வழக்கறிஞர்கள் , நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும் நீதி கேட்டும் , நாளை வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் அதிமுக, மற்றும் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. இதையடுத்து பெரும்பாலான தனியார் பள்ளிகள் நாளை விடுப்பு அறிவித்துள்ளது. தனியார் பேருந்துகளும் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மக்களின் உணர்வுகளை மதித்து, நகர் முழுவதும் சிசிடிவி காமிராக்களை அமைப்பதுடன் , கஞ்சா புழக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதும் காலத்தின் கட்டாயம்.