நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட சுகாதார ஆய்வு கூட்டத்தில், சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பல்துறை அதிகாரிகள் உள்பட சுமார் 150 பேர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சில அரசு அதிகாரிகள் அமர்ந்த நிலையிலேயே தூங்கி வழிந்தது, செல்போனில் பப்ஜி விளையாடியது, முகநூலில் வீடியோ பார்த்தது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.