உதகை முதுமலையில் கடும் வறட்சியால் ஏற்படும் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க இரவு, பகலாக வனப்பகுதி சாலை முழுவதும் தீ தடுப்பு கோடுகள் வனத் துறையினர் அமைத்துவருகின்றனர்.
வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதியில் வாழக்கூடிய மான்கள், சிங்கவால் குரங்குகள், கீரி, யானைகள் உட்பட வனவிலங்குகளுக்கு தடையின்றி தண்ணீர் ஏற்படுத்தி தர முடிவு செய்து உதகை அருகே உள்ள காமராஜர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.