திருப்பத்தூரில் உள்ள அரசினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தரையில் அமர்ந்து குறைகளை கேட்டறிந்தார்.
கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதாக மாணவிகள் தெரிவிக்கவே, அதற்கான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதோடு, தனது செல்ஃபோன் எண்ணை வழங்கி எப்போது வேண்டுமானாலும் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தினார்.