சுற்றுலாப் பயணிகளாக ரஷ்யாவுக்குச் சென்ற தங்களை ஏமாற்றி உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிட நிர்பந்திப்பதாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர்கள் வீடியோ வெளியிட்டு இந்திய அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளனர்.
பஞ்சாப், ஹரியானானவைச் சேர்ந்த 7 இளைஞர்கள் புத்தாண்டை ரஷ்யாவில் கொண்டாட ரஷ்யாவுக்கு சென்ற போது, கவனக்குறைவாக பெலாரஸுக்கு சென்றடைந்ததால், அங்குள்ள அதிகரிகள் அவர்களை பிடித்து ரஷ்யா அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளனர்.
ராணுவ ஆவணங்களில் கையொப்பமிட வைத்த அதிகாரிகள், உக்ரைனுக்கு எதிரன போரில் தங்களை சண்டையிட வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளனர்.