நீருக்கு அடியில் செல்லும் நாட்டின் முதலாவது மெட்ரோ ரயில் வழித்தடத்தை கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஹவுரா மைதானம் முதல் எஸ்பிளனேடு வரை ஹூக்ளி ஆற்றின் குறுக்கே நீருக்கு அடியில் கட்டப்பட்டுள்ள மெட்ரோ வழித்தடத்தின் முதலாவது ரயிலில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் மற்றும் மாணாக்கர்களுடன் பிரதமர் பயணித்தார்
நாட்டின் கட்டமைப்பு முன்னேற்றத்தை பறைசாற்றுவதாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் பாதை அமைந்துள்ளதுடன் கொல்கத்தாவின் இரு பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாகவும் இது கருதப்படுகிறது.
இது தவிர, மேற்கு வங்கத்தில் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில், மொத்தம் 15,400 கோடி ரூபாய் மதிப்பில், ஆக்ரா, கொச்சி மெட்ரோ சேவைகள் உள்ளிட்ட திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டு, பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது.