சென்னையில் நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் கொசு உற்பத்தியை தடுக்க ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணி தொடங்கியுள்ள நிலையில், சென்னை, ஓட்டேரியில் உள்ள நல்லா கால்வாயில் மருந்து தெளிக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் தொடங்கி வைத்து ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளரை சந்தித்த மேயர் பிரியா, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைந்துள்ளதாகவும், குடியிருப்புகள், தனியார் நிறுவனங்களில் கொசு உற்பத்தியாகும் சூழல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.