​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஷ்யாவின் ராணுவ ரோந்துக் கப்பல் மீது டிரோன் தாக்குதல்

Published : Mar 06, 2024 8:47 AM

ரஷ்யாவின் ராணுவ ரோந்துக் கப்பல் மீது டிரோன் தாக்குதல்

Mar 06, 2024 8:47 AM

ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ரஷ்யாவின் போர்க்கப்பலை கருங்கடலில் டிரோன் தாக்குதல் மூலம் வெற்றிகரமாக மூழ்கடித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

கருங்கடலில் ரஷ்யாவின் கடற்படைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் அதன் பலம் மூன்றில் ஒருபங்காக குறைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1300 டன் எடை கொண்ட செர்கய் கோட்டோவ் என்ற ரோந்துக் கப்பலை டிரோன்கள் மூலம் தாக்கியதால் அந்தக் கப்பல் கடலில் மூழ்கியதாக உக்ரைன் அறிவித்துள்ளது.இது ரஷ்யாவின் புத்தம் புதிய கப்பல் என்பதும் கூடுதல் தகவல்.