செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலையும், பூமியின் வெப்பநிலையும் ஓரளவிற்கு சமமாக உள்ளதால் தான் ஆராய்ச்சிகளில் செவ்வாய் கிரகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நாசா விஞ்ஞானி சுவாதி மோகன் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கல்லூரி மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுவாமியிடம் ஏ.ஐ. தொழில்நுட்பம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு, எ.ஐ. தொழில்நுட்பத்தால் மனித மூளை அளவுக்கு இயங்க முடியாது என்று அவர் கூறினார்.