தென் சீன கடலில் முகாமிட்டுள்ள பிலிப்பைன்ஸ் கடற்படைகளுக்கு உணவு பொருட்களை எடுத்துச் சென்ற கப்பலை விரட்டும் நோக்கில் சீன கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான கப்பல்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தன.
அதில் ஒரு கப்பல் தங்கள் நாட்டு கப்பல் மீது வந்து மோதியதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.
வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு தென் சீன கடலில் உரிமை உள்ளபோதும், சர்வதேச விதிமுறைகளை மீறி பெரும்பகுதி கடற்பரப்பை சீனா உரிமை கோரிவருகிறது.