அமெரிக்காவின் நாஷ்வில் பகுதியில், வானில் பறந்துகொண்டிருந்த போது ஏற்பட்ட எஞ்சின் கோளாறால் கீழே விழுந்து தீப்பிடித்த சிறிய விமானத்தில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர்.
எஞ்சின் பழுதை அடுத்து விமானத்தை நாஷ்வில் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கிடைத்த நிலையில், என்ஜின் முற்றிலுமாக செயலிழந்ததால் விமான நிலையத்துக்கு சில கிலோ மீட்டர்கள் தொலைவில் நெடுஞ்சாலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து விமானப் போக்குவரத்து நிர்வாகம் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.