8 மணி நேர வேலை, வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தற்காலிக தூய்மை பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் 2-வது நாளாக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் நாகை நகராட்சியின் 36 வார்டுகளிலும் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி இருப்பதாக பொது மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மக்கும் குப்பை மற்றும் மனிதக் கழிவுகளை அள்ள கட்டாயப்படுத்தியதாக நகராட்சி ஆணையர் மீது குற்றஞ்சாட்டி அவர்கள் முற்றுகையிலும் ஈடுபட்டனர். நகராட்சி ஆணையர் வருத்தம் தெரிவித்ததை அடுத்து முற்றுகை கைவிடப்பட்டது.