அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குச்சீட்டில் முன்னாள் அதிபர் டிரம்ப்பின் பெயர் இடம் பெற விதிக்கப்பட்ட தடையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள டிரம்ப், இது அமெரிக்காவுக்கே கிடைத்த வெற்றி என கூறியுள்ளார்.
2021-ஆம் ஆண்டு, நாடாளுமன்ற கட்டடத்துக்கு வெளியே டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்ட வழக்கில், அதிபர் தேர்தல் வாக்குச்சீட்டில் டிரம்ப் பெயர் இடம்பெறக் கூடாது என கொலராடோ நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
மத்திய அரசில் உயர் பொறுப்பு வகிப்பவர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிராக நாடாளுமன்றம் மட்டுமே இத்தகைய உத்தரவைப் பிறக்கலாம் என்று கூறி இத்தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
((வாஷிங்டன், அமெரிக்கா))
((
2021-ல் நாடாளுமன்ற கட்டடத்துக்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரம் செய்த வழக்கு
))