தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து தங்கள் மீது ஆணு ஆயுத தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்துவருவதாக வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது.
கடந்தாண்டை விட 2 மடங்கு கூடுதல் படைகளுடன் தென்கொரிய ராணுவமும், அமெரிக்க ராணுவமும் கூட்டு போர் பயிற்சியை தொடங்கி உள்ள நிலையில், தங்கள் நாட்டை ஆக்கிரமிக்க நினைத்தால் ராணுவம் தக்க பதிலடி தரும் என வட கொரியா எச்சரித்துள்ளது.
அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய வடகொரிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவதற்காக விமானப்படை வீரர்கள் பிரத்யேக பயிற்சி மேற்கொண்டுவருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.