மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் துர்கா ஸ்டாலினுடன் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.